இறுதி கட்ட படப்பிடிப்பில் வெற்றிமாறனின் 'விடுதலை'
ADDED : 1246 days ago
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . ஜெயமோகன் எழுதிய விடுதலை என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது . இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டு வருவதாகவும், மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டை பயிற்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.