பாலா படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா
ADDED : 1246 days ago
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா, தற்போது தனது 41வது படத்திலும் அவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா மீனவராக நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக கோவாவில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் மீனவராக நடிக்கும் சூர்யா, அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதில் இளமையாக நடிக்கும் சூர்யா, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல்கட்ட படப்பிடிப்பில் இளைஞராக நடித்து வந்த சூர்யா அடுத்தபடியாக வயதான அப்பா வேடத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.