மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1214 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1214 days ago
தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு, என்று நினைத்துக் கொண்டு விதவிதமாக தலைப்பு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதில் ஒன்றுதான் 'ஓட விட்டு சுடலாமா'.
எவரிஒன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரகாஷ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் சிவதாஸ் இசை அமைக்கிறார். எம்.வி.ஜிஜேஷ் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக்கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் கதை. முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம். என்றார்.
1214 days ago
1214 days ago