ஜூன் 5ல் ‛இரவின் நிழல்' இசை வெளியீடு
ADDED : 1323 days ago
பார்த்திபன் நடித்து, இயக்கி உள்ள திரைப்படம் ‛இரவின் நிழல்'. உலகின் முதல் நான் லீனியர் படமாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடலை சமீபத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்தி வெளியிட்டார். படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது பட ரிலீஸிற்கான பணிகளை துவக்கி உள்ளார் பார்த்திபன்.
இந்நிலையில் ஜூன் 5ல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளார் பார்த்திபன். அதோடு ஏ.ஆர்.ரஹ்மானின் 30 வருட திரை பயண கொண்டாட்டத்தையும் சேர்த்து இந்த விழாவில் நடத்த உள்ளார். இதற்காக இந்தியாவில் பிற மொழிகளில் உள்ள திரைக்கலைஞர்களையும் அழைக்க உள்ளார்.