கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்
ADDED : 1234 days ago
பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா கான் சமீபத்தில் பிகினி உடை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் மேலும் சில பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐராகான். அதோடு எனது பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்து என்னை விமர்சித்து கேலி செய்த அனைவருக்கும் மேலும் இந்த புகைப்படங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தனது பிறந்தநாளின் போது பிகினி உடை அணிந்து கேக் வெட்டி கவர்ச்சி பிரியர்களை அலறவிட்ட அமீர்கானின் மகள் தற்போது நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படங்களை வெளியிட்டு மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.