உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நேரத்தில் இரண்டு 25 மில்லியன் சாதனையில் 'விக்ரம்'

ஒரே நேரத்தில் இரண்டு 25 மில்லியன் சாதனையில் 'விக்ரம்'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'பத்தல பத்தல' பாடல் கடந்த வாரம் யு டியுபில் வெளியானது. இப்பாடல் தற்போதும் யு டியூப் மியூசிக்கில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மேலும், 25 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. கமல்ஹாசன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிகபட்சமாக 'தசாவதாரம்' படத்தின் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் வீடியோ 39 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'பத்தல பத்தல' பாடல் முறியடிக்க வாய்ப்புள்ளது.

'விக்ரம்' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரும் தற்போது 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரே சமயத்தில் 'விக்ரம்' படத்தின் பாடலும், டிரைலரும் 25 மில்லியன் பார்வைகைளைக் கடந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இளம் கூட்டணியினருடன் கமல்ஹாசனின் 'விக்ரம்' பயணம் வெற்றிகரமாகவே நடை போட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !