கடலில் தவறி விழுந்த ப்ரியதர்ஷினி : அட்வைஸ் செய்த ரசிகர்கள்
ADDED : 1333 days ago
நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரைக்கு வந்துள்ள ப்ரியதர்ஷினி தற்போது 'எதிர் நீச்சல்' சீரியலில் நடித்து வருகிறார். இவர் தொகுப்பாளினி திவ்யத்ரஷினியின் அக்கா ஆவார். திவ்யதர்ஷினிக்கு முன்பே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ப்ரியதர்ஷினி, திருமணத்திற்கு பின் பேமிலி, குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார். சாஸ்திர நடனங்களில் பயிற்சி பெற்ற அவர், போட்டோஷூட், ரீல்ஸ் என பிசியாக இருந்தார். அவரைத்தான் மீண்டும் சீரியலில் நடிக்க அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ரீல்ஸ் வீடியோவுக்காக பாறையில் நின்று பரதநாட்டியம் ஆடும் ப்ரியதர்ஷினியை கடல் அலை தள்ளிவிடுகிறது. இதை காமெடியாக எடிட் செய்து ப்ரியதர்ஷினி வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இது போன்று இனி ரிஸ்க் எடுக்க வேண்டும் என ப்ரியதர்ஷினிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.