கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பூஜா, தமன்னா மகிழ்ச்சி
ADDED : 1235 days ago
கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமா பிரபலங்கள் பலர் அதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர், நடிகர், இயக்குனர் மாதவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். பாலிவுட் நடிகைகள், தென்னிந்திய நடிகைகள் சிலரும் கேன்ஸில் தான் உள்ளனர்.
கேன்ஸில் ரஹ்மானுடன் இரவு நேர டின்னர் நடந்துள்ளது. அதில் சேகர் கபூர், மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து தமன்னா, “இதைவிட ஒரு இரவு எப்படி இன்னும் அற்புதமாக இருக்கம்,” என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் செல்பி எடுத்துக் கொண்ட பூஜா ஹெக்டே 'த லெஜன்ட்' எனக் குறிப்பிட்டுள்ளார்.