கேஜிஎப் இயக்குனர் - ஜூனியர் என்டிஆர் இணையும் படம் அறிவிப்பு
ADDED : 1281 days ago
சமீபத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் ஜூனியர் என்டிஆர். நேற்று அவரது 39வது பிறந்த நாள். இதை முன்னிட்டு கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் இணையும் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை பிரசாந்த் நீல் தனது அறிவித்தார்.
இதுவரை 29 படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை கொரட்டல சிவா இயக்குவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இருவரும் தங்கள் கையில் இருக்கும் படத்தை முடித்து விட்டு இந்த படத்தில் இணைகிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. மைத்ரி மூவிசுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் தயாரிக்கிறார். ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக இந்த படம் உருவாகிறது.