வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன்
ADDED : 1335 days ago
நட்சத்திர தம்பதிகளான நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் இணைந்து சூர்யவம்சம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். படிப்பு நிறைவு பெற்றதையடுத்து அவருக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் கலந்துகொண்டனர். மகனை வாழ்த்தி ராதிகா புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு சிறுவன் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக இன்று மாறியுள்ளார். தனது எதிர்காலத்தை பொறுப்பாக கையாள்வதை கண்டு பெற்றோர்களாகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். உங்கள் பட்டப்படிப்பு மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ராகுல் என்று ராதிகா கூறியுள்ளார் .