ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா
ADDED : 1230 days ago
ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகினார். சின்னத்திரை ஜோடிகளில் சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ள அவர், தனது மகள் அய்லாவுடன் ஒரு மால் வளாகத்தில் யானை சிலைகளுக்கு முன் நின்று புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை அய்லா, ஆல்யா செய்வது போலவே அழகாக போஸ் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் 'நூலை போல சேலை, தாயை போல பிள்ளை, ஆல்யா போல அய்லா' என பழமொழி சொல்லி கொஞ்சி வருகின்றனர்.