நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1278 days ago
தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் ‛போண்டா' மணி. இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்த இவர் பின்னர் படங்களில் நடித்து பிரபலமானார். போண்டா தொடர்பான காமெடியில் நடித்து பிரபலமானதால் போண்டா மணியாக மாறினார். சினிமா தவிர்த்து அதிமுக.,விலும் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். இந்நிலையில் இதய பிரச்னை காரணமாக சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். போண்டா மணியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன். தற்போது அவரது உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம்.