நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட்
ADDED : 1230 days ago
‛பிரேம்' படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் 6 ஆண்டுகள் கழித்து இவர் இயக்கி உள்ள படம் ‛கோல்ட்'. பிரித்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன், திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படம் கொரோனா பிரச்னையால் நீண்டகாலமாக தயாராகி வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கின. இதுபற்றி அல்போன்ஸ் கூறுகையில், ‛‛கோல்ட் படம் படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன'' என தெரிவித்துள்ளார்.