இணையத்தில் கசிந்த மோகன்லாலின் 'பரோஸ்' புகைப்படங்கள்
ADDED : 1343 days ago
மலையாள நடிகர் மோகன்லால் முதன் முதலில் இயக்கும் படம் பரோஸ். 400 ஆண்டுகளாக வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களின் பாதுகாவலரான போர்த்துகீசிய புராண நபர் பரோஸ் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. ஜிஜோ புன்னூஸ் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார். ஏஆர் ரஹ்மானிடம் இசை பயின்ற லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது பரோஸ் படத்தின் பல புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.