ஜூன் 24ல் வெளியாகும் அசோக் செல்வனின் 'வேழம்'
ADDED : 1224 days ago
அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் 'வேழம்' படத்தை இயக்குனர் சந்தீப் ஷ்யாம் இயக்கி வருகிறார். நாயகியாக ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி ஆகியோர் கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அஜய், ராஜ கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், பி.எல் தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே ஆகியோர் நடித்துள்ளனர். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்டத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் மூலம் முதன்முறையாக அக் ஷன் கதைக்களத்தில் அசோக் செல்வன் பயணித்துள்ளார்.