கம்பேக் கொடுத்த அருண்
ADDED : 1241 days ago
'பூவே உனக்காக' தொடரில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருண். ஆனால், கதிர் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமானதாக இல்லை. மேலும், வேறு சில காரணங்களால் அவர் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல் ஹேண்ட்சம்மாக இருக்கும் அருண் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடரில் கம்பேக் கொடுத்துள்ளார். இதை அருண் தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கு போது ஒரு ஜாலியான காதல் மன்னன் கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார் என்று தெரிகிறது. அருணின் கம்பேக்கால் மகிழ்ச்சியடைந்துள்ள அவரது ரசிகர்கள் அருணின் இந்த புதிய பயணம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.