வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி
ADDED : 1229 days ago
நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா மீது கடந்த 2015ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் 6 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் இதனை ரத்து செய்யக்கோரி, எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.