பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி
ADDED : 1259 days ago
நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் நடித்தார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார். ஸ்ருதிக்கும், பாடி பில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் நேற்று எளிய முறையில் நடந்தது. திருமணத்தில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினர். ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.