ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர்
ADDED : 1228 days ago
நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக் ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛அக்னிச் சிறகுகள்'. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது. ‛‛தோத்தவன் செத்துருவான், ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான்'' என்பது போன்ற வசனங்களுடன் ஆக் ஷன் காட்சிகளாக உள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.