1 கோடி பார்வையாளர்களை கடந்த சிம்பு பட பாடல்
ADDED : 1273 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்த சிம்பு, மாநாடு வெற்றிக்குப்பிறகு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் இப்படத்திலிருந்து காலத்துக்கும் நீ வேணும் என்ற லிரிக் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த பாடல் ஒரு கோடி பார்வைகளை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்பாடலை தாமரை எழுதியிருக்கிறார்.