மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1222 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1222 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1222 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1222 days ago
கடந்த சில வருடங்களில் மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படங்களை கவனித்துப் பார்த்தால் பெரும்பாலும் காமெடி, திரில்லர், மற்றும் துப்பறியும் கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்து வருகின்றன. அவருடைய ஆக்சன் படங்களை பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டதே என்று அவரது ரசிகர்களே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஏக்கத்தை தீர்க்கும் விதமாக தற்போது பிரித்விராஜ் நடிப்பில் முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா.
ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் காட்டுக்கு ராஜாவாக கடுவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரித்விராஜ். அவரை வேட்டையாட துடிக்கும் போலீஸ் அதிகாரியாக வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். “அவர்கள் சண்டையை விரும்பினார்கள்.. இவன் அவர்களுக்கு போரை தந்தான்” என்கிற கேப்சல் உடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், இந்த படம் பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது.
1222 days ago
1222 days ago
1222 days ago
1222 days ago