‛இன்றைய வலி நாளைய வெற்றி' : சூரியின் மிரட்டலான சிக்ஸ் பேக்
ADDED : 1221 days ago
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடிகராக நடித்து வருகிறார் சூரி. 'அண்ணாத்த' 'டான்' போன்ற படங்களில் சூரி சமீபத்தில் நடித்திருந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் போலீசாக சூரி நடித்து வருவதால் தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். சூரி சமீபத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சூரி மிரட்டலான சிக்ஸ் பேக் தோற்றத்துடன் இருக்கிறார். இதற்கு கேப்ஷனாக ‛‛இன்றைய வலி நாளைய வெற்றி'' என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.