லாஸ்லியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹேக்கர்ஸ்
ADDED : 1222 days ago
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று பிரபலமான இவர், அதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த கூகுள் கு ட்டப்பா என்ற படத்திலும் நாயகியாக நடித்தார். தற்போது ஓரிரு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவரின் இன்ஸ்டா பக்கத்தை யாரோ விஷமிகள் ஹேக் செய்துவிட்டனர். அதோடு அவர் ரகசியமாக வைத்திருந்த சில புகைப்படங்களை லாஸ்லியா லீக்ஸ் என்ற பெயரில் அவர்கள் வெளியிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் லாஸ்லியா. தற்போது அவரின் இன்ஸ்டா பக்கம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர்ஸ் லீக் செய்த அந்த புகைப்படங்களையும் நீக்கி உள்ளார் லாஸ்லியா.