விக்ரம் - பஹத், விஜய் சேதுபதியின் கேரக்டர் வெளியீடு
ADDED : 1225 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம். ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் என்ற கேரக்டரில் கமல் நடித்துள்ளார். அமர் என்ற வேடத்தில் பஹத் பாசில் நடிப்பதாக நேற்று போஸ்டர் வெளியிட்டனர். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் வேடத்தின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கேரக்டரில் நடிப்பதாகவும், தீயவன் வருகிறான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.