ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிக்கும் படம் விரைவில் ஆரம்பம்
ADDED : 1269 days ago
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி, சாரா, தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது .
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தப் படம் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.