உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி

இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி


மலையாள திரையுலகில் கடந்த 90களில் ஜெயராம், ஊர்வசி ஜோடி ரொம்பவே பிரபலம். அதனைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 2002ல் கமல் நடித்த 'பஞ்சதந்திரம்' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதன்பிறகு இவர்கள் இருவரும் பெரும்பாலும் இணைந்து நடிக்கவில்லை. 2020ல் ஆந்தாலஜி படமாக வெளியான 'புத்தம் புது காலை' படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் இடம்பெற்ற 'இளமை இதோ இதோ' குறும்படத்தில் மீண்டும் இவர்கள் இணைந்து நடித்திருந்தனர். தற்போது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் பாண்டியராஜ் தற்போது இயக்கி வரும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஊர்வசி, ஜெயராம் இருவருமே காமெடிக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் போது தங்களை மீறி சிரித்து விடுவதால் கிட்டத்தட்ட 15 டேக்குகள் வரை செல்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயராம் கூறியுள்ளார். இருந்தாலும் இயக்குனர் பாண்டியராஜ் அதை எல்லாம் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு காட்சிகளை படமாக்கி வருகிறார் என்றும் பாண்டிராஜின் பொறுமையை புகழ்ந்துள்ளார் ஜெயராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !