'டைட்டானிக் : காதலும் கவுந்துபோகும்' புதிய ரிலீஸ் தேதி வெளியானது
ADDED : 1257 days ago
கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும்' படத்தை இயக்குனர் ஜானகிராமன் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். நான்கு காலக்கட்டங்களில் நகரும் காதல் கதையாக உருவாகி உள்ளது. இந்த படம் கடந்த மே 6ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர். சில காரணங்களால் தள்ளி போனது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 24ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.