போலிகளிடம் ஏமாற வேண்டாம்: இயக்குனர் விஜய்
ADDED : 1272 days ago
கிரீடம், மதராசபட்டினம், தெய்வதிருமகள், தாண்டவம், தலைவா, தேவி, வனமகன், தலைவி உள்பட பல படங்களை இயக்கியவர் விஜய். சமூக வலைத்தங்கள் எதிலும் இவர் இல்லை. ஆனால் அவரது பெயரில் முகநூல் பக்கம், டுவிட்டர் பக்கம் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் செயல்பட்டு வருகிறது. இவற்றின் ஸ்கீரின் ஷாட்களை வெளியிட்டுள்ள விஜய், நான் சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. என் பெயரில் இருக்கும் அனைத்துமே போலியானவை அவற்றின் மூலம் எந்த வகையிலும் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.