மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1215 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1215 days ago
நடிகர் ரிஷி தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் 'டீலா நோ டீலா', 'கையில் ஒரு கொடி - ஆர் யூ ரெடி?', 'சூப்பர் சேலஞ்ச்' ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. சினிமாக்களில் குணசித்திர வேடங்களிலும், கெஸ்ட் அப்பிரயரன்ஸிலும் நடித்து வரும் ரிஷி, தமிழ் தொலைக்காட்சியில் இதுவரை ஒரே ஒரு தொடரில் மட்டுமே நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'இது ஒரு காதல் கதை' தொடரில் அனந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ரிஷி தமிழ் சின்னத்திரை நடிக்கவேயில்லை. இந்நிலையில் ரிஷி தற்போது மீண்டும் தமிழ் சீரியலுக்கு வந்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் சேதுபதி ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் ரிஷி நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷியை சின்னத்திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
1215 days ago
1215 days ago