அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதியை இயக்கும் எச்.வினோத்!
ADDED : 1217 days ago
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தற்போது அவரது 61வது படத்தையும் இயக்கி வருகிறார் எச்.வினோத். அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படம் ஆன்லைன் வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் குமார் வெள்ளை தாடி, தலைமுடியுடன் சற்று வயதான கெட்டப் மற்றும் இன்னொரு இளமையான தோற்றத்திலும் நடிக்கிறார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்ததும் அடுத்தாண்டு தொடக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை இயக்கப்போகிறார் எச்.வினோத். இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.