சுந்தர்.சி-யின் ‛காபி வித் காதல்'
ADDED : 1218 days ago
அரண்மனை 3 படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கி உள்ள புதிய படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா என மூன்று ஜோடிகள் நடித்துள்ளனர். அவர்களுடன் யோகிபாபு, விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.. இப்படத்தின் டைட்டில், போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் இடம் பெற்று உள்ளனர். அதோடு, காபி வித் காதல் என்ற டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சுந்தர். சி - குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.