மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1187 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1187 days ago
அண்ணாத்த படத்தையடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நடிக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கி வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் தனது 169 வது படத்திலிருந்து நெல்சனை நீக்கிவிட்டு வேறு இயக்குனருக்கு ரஜினி கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் ரஜினி அதை மறுத்தார். தனது புதிய படத்தை நெல்சனே இயக்குகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். அதேசமயம் பீஸ்ட் படத்தின் திரைக்கதை ரஜினிக்கு திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால் அந்த படத்தின் திரைக்கதை பணிகளில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரையும் இணைத்திருக்கிறார் ரஜினி. இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் இப்படத்தில் கே.எஸ் .ரவிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1187 days ago
1187 days ago