கிரைம் கலந்த திரில்லராக உருவாகும் “சூரகன்”
ADDED : 1216 days ago
கார்த்திகேயன் என்பவர் தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் “சூரகன்”. அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் இயக்க, கதாநாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி, ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி, சுரேஷ் மேனன், கேஎஸ்ஜி வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பை பாக்யராஜ் கிளாப் அடித்து இன்று(ஜூன் 6) துவக்கி வைத்தார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். கிரைம் கலந்த திரில்லராக இந்த படத்தை உருவாக்குகின்றனர்.