கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை : காயத்ரி
ADDED : 1221 days ago
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, துக்ளக் தர்பார், சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர் உள்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி சங்கர். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் காயத்ரியின் ரோல் பற்றி ஒரு மீம்ஸ் ஒன்று வைரல் ஆனது. அதாவது, திரைப்படங்களில் காயத்ரியின் கணவர் கேரக்டர்களுக்கு ஏதாவது கோளாறு இருக்கும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கணவர் நினைவு மறத்தல் நோயுள்ளவர், சூப்பர் டீலக்ஸ் படத்தில் கணவர் திருநங்கையாக மாறி விடுவார், விக்ரம் படத்தில் கணவர் என்ன வேலை பார்க்கிறார் என்றே தெரியாது. அவரால் உயிரும் போய்விடும். இப்படி பதிவிட்டு ஒரு மீம்ஸ் போட அதற்கு காயத்ரி, கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை என்று பதிவிட்டுள்ளார்.