தெய்வ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய தர்ஷா குப்தா
ADDED : 1226 days ago
சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து மிகவும் பிசியாக வலம் வருகிறார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் பல ரசிகர்களை அவருக்கு அடிமையாக்கியது என்றே சொல்லலாம். இதனாலேயே பலரும் தர்ஷாவை பின் தொடர்ந்து அவரது பதிவுகளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடியுள்ள தர்ஷா, கோயம்புத்தூரில் உள்ள செசைர் மாற்றுத்திறனாளிகளுக்கான அனாதை ஆசிரமத்தில் வைத்து கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை வெளியிட்டு, 'தெய்வ குழந்தைகளுடன் என்னுடைய பிறந்தநாள்' எனவும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த நற்பண்பை பார்த்து பூரித்து போன ரசிகர்கள் தர்ஷாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.