மஞ்சக்காட்டு மைனா தர்ஷிகா லேட்டஸ்ட் போட்டோஸ்
ADDED : 1263 days ago
'தாலாட்டு' சீரியலில் தெரசா என்ற கதாபாத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து வருகிறார் தர்ஷிகா. இவர் கார்த்தி நடித்த மலபார் கோல்டு விளம்பரத்திலும் நடித்திருந்தார். தாலாட்டு சீரியலில் தர்ஷிகாவை தெரசாவாக பார்த்த பலரும் அந்த விளம்பரத்தில் தர்ஷிகாவின் அழகை பார்த்து தர்ஷிகா இவ்வளவு அழகானவரா என்று ஆச்சரியமடைந்தனர். இதனைத்தொடர்ந்து தர்ஷிகாவுக்கு இன்ஸ்டாவில் ரசிகர்களும் அதிகமாயினர். அவரது போதையேற்றும் கண்கள் பலரையும் கிறங்க செய்து வருகிறது. மாடலிங்கில் ஆர்வம் காட்டும் தர்ஷிகா இன்ஸ்டாவில் போட்டோஷூட்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மஞ்சள் உடையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்களும் அந்த வரிசையில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வாயிலும் மஞ்சக்காட்டு மைனா பாடல் முனு முனுத்து வருகிறது.