உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவை இங்கு தான் முதலில் பார்த்தேன் - விக்னேஷ் சிவன்

நயன்தாராவை இங்கு தான் முதலில் பார்த்தேன் - விக்னேஷ் சிவன்

சில பல வருடங்களாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவில் இந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய திருமணமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அமைந்தது. மகாபலிபுரத்தில் நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தொடர்ந்து நேற்று திருப்பதியில் வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில் இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை புதுமண தம்பதியர் விக்னேஷ் சிவன், நயன்தாரா சந்தித்தனர். நயன்தாரா பேசும்போது, ‛‛எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. நாங்கள் தற்போது திருமணம் செய்துள்ளோம். தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டார்.

விக்னேஷ் சிவன் பேசும்போது : ‛‛இந்த ஓட்டலில் தான் முதன்முதலில் நான் நயன்தாராவை சந்தித்தேன், அவரிடம் கதையை கூறினேன். அதனாலேயே இந்த நிகழ்வை இங்கு நடத்த விரும்பினோம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள், நன்றி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !