வைரலாகும் சூரியின் உடற்பயிற்சி வீடியோ
ADDED : 1211 days ago
நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்காக அவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வருகிறார். சமீபத்தில் கூட தனது சிக்ஸ் பேக் புகைப்படங்களை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு நடக்கும் ஏரியா மலை பகுதியாக இருப்பதால் அங்கு உடற்பயிற்சி கூடங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் உதவியாளர் ஒருவரின் உதவியோடு சூரி கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.