இகோர் இயக்கத்தில் நடிக்கும் ஹன்சிகா
ADDED : 1309 days ago
தமிழில் தற்போது மஹா, ரவுடி பேபி மற்றும் ஆர்.கண்ணன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இதைத்தொடர்ந்து ஆர்யா நடித்த கலாபக்காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மஹா படத்தைப் போலவே இந்த படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஜனனி துர்காவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.