அஜித் 61 : புதுத்தகவல்
ADDED : 1313 days ago
வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அஜித்தின் 61வது படமாக உருவாகி வருகிறது. மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் கதை வங்கி கொள்ளை தொடர்பான கதை என்றும், அதில் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வந்தது. இப்போது கூடுதலாக இது வங்கி கொள்ளை கதை தான், அதுவும் உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது ஒரு பரபரப்பான கதை என்பதால் படத்தில் பாடல்கள் இல்லை என்றும், தீம் மியூசிக் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.