பட்டாம்பூச்சி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
ADDED : 1219 days ago
சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி படத்தை குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார் . இப்படத்தில் சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ளனர் . முக்கிய வேடங்களில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மீபத்தில் இப்படம் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ரீலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.