மலையாளத்தில் அறிமுகமாகும் ஹாலிவுட் நடிகை
ADDED : 1255 days ago
சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான 'ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் படத்தில் டைனோசர் பூங்காவின் பாதுகாவலராக நடித்திருந்தவர் வரதா சேது. இவர் அமெரிக்காவில் வாழும் மலையாளி. இதுதவிர ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'நவ் யூ சீ மீ 2' இல் நடிகை ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார், ஹாலிவுட் விண்வெளி புனைகதை தொடரான 'ஸ்டார் வார்ஸ்'ல் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ஹாலிவுட் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது வரதா சேது பிரமதாவனம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஜெயராஜ் இயக்குகிறார். ஷாம் நீல் நாயகனாக நடிக்கிறார். உன்னிமுகுந்தன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சச்சு சாஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீனிஷ் இசை அமைக்கிறார்.