எஸ்.பி.பி 75வது பிறந்த நாள் இசை நிகழ்ச்சி: 19ம் தேதி ஒளிபரப்பாகிறது
ADDED : 1210 days ago
இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் காலமானார்.
கடந்த 4ம் தேதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 75வது பிறந்த நாள். இதை முன்னிட்டு 'எஸ்பிபி லைவ்'என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை எஸ்.பி.பி.சரண் நடத்தினார். இதில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பி சுசீலா. எஸ் ஜானகி, தேவா, வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 19ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.