மலையாள நடிகர் டி.பிலிப் காலமானார்
ADDED : 1205 days ago
மலையாள சினிமாவின் பிரபல குணசித்ர நடிகர் டி.பிலிப். 76 வயதான திலீப் முதுமை உடல்நலக் கோளாறுகளால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். டி.பிலிப்பிற்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பிலிப் சினிமாவில் அறிமுகமாகி, கோட்டயம் குஞ்சச்சன், வேட்டன், அர்த்தம், பழசிராஜா உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.