உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் வெற்றி : முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்

விக்ரம் வெற்றி : முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடித்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியையும், வசூலையும் கொடுத்தது. இந்த படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டார். இதன் மூலம் அவரது ரெட்ஜெயண்ட் நிறுவனம் பல கோடி லாபம் ஈட்டியிருக்கிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று முதல்வரை சந்தித்தார். முதல்வருக்கு மலர்கொத்து வழங்கினார். அவருடன் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரனும் சென்றார். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !