12 வருடங்களுக்கு பிறகு டப்பிங் பேசிய ஐஸ்வர்யா ரஜினி
ADDED : 1215 days ago
2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் ரீமா சென்னுக்கு தமிழில் டப்பிங் கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினி. அதன் பிறகு எந்த படங்களுக்கும் டப்பிங் கொடுக்காத அவர், 12 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார். அப்படி தான் டப்பிங் பேசும் வீடியோ, புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படத்திற்காக டப்பிங் பேசியுள்ளேன். இது தண்ணீருக்குள் மீன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பது போன்ற ஒரு சந்தோஷத்தை எனக்கு கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.