அட்லாண்டிக் கடல் பயணத்தில் அஜித்
ADDED : 1298 days ago
அஜித் தற்போது உலக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் வலம் வந்த அஜீத் தற்போது அட்லாண்டிக் கடல் பயணத்தில் இருக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் அட்லாண்டிக் கடல் பயணம் என்பது மிகவும் பிரபலம். அந்த பயணத்தில் இணைந்துள்ளார் அஜித். அவருடன் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ள அஜித்தின் படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் அஜித் பைக் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அஜித்தின் துணிச்சலான பைக் பயணங்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.