மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1198 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1198 days ago
சின்னத்திரை ஜோடிகளிலேயே ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட் என்றால் அது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி தான். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அது முதலே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பு மழை பொழிந்து வருகிறார்கள். இந்த ஜோடியை பார்க்கும் பலரும் தாங்களும் இது போல காதலிக்க வேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு அன்னியோனியமாக இருந்து வருகின்றனர்.
விஜய் டிவியின் 'ராஜா ராணி 2'-வில் நடித்து வந்த ஆல்யா பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். அவர் தற்போது தனது கணவர் சஞ்சீவ் நடிக்கும் 'கயல்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குழந்தை அய்லாவுடன் சென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அந்த புகைப்படம் இண்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1198 days ago
1198 days ago