தேவர்மகன் 2 : மீண்டும் கமலுடன் இணையும் விஜய்சேதுபதி, பஹத்?
ADDED : 1297 days ago
சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு ஆகியோர் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான படம் தேவர் மகன். இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். இந்த இரண்டாம் பாகம் கமல் மற்றும் நாசரின் மகன்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பந்தமான கதையில் உருவாகிறதாம். அந்தவகையில் முதல் பாகத்தில் சிவாஜி கணேசன் அப்பாவாக நடித்தது போன்று இந்த பாகத்தில் கமல்ஹாசன் அப்பாவாக நடிக்க போகிறார். அவரது மகனாக விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த நாசரின் மகனாக பகத் பாசில் நடிக்கிறாராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.