சங்கராந்திக்கு வெளியாகும் சிரஞ்சீவியின் 154வது படம்
ADDED : 1199 days ago
ஆச்சார்யா படத்தை அடுத்து காட்பாதர், போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் பாபி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 154வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு வால்டேர் வீரைய்யா என பெயர் வைக்க போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2023 ஆண்டு சங்கராந்தி திரைக்கு வருவதாக அப்படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கி ஒரே கட்டமாக முடிவடைய உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.